கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை 3ம் தேதி) நடக்கிறது. இன்று (ஜூலை 2) காலை 6 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், கலச ஆராதனை, கணபதி ஹோமம், கோ பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கலச பூஜை, சிரதி வாசம், தானியாதி வாசம், மஹா மங்களார்த்தி நடக்கிறது. நாளை (3ம் தேதி) காலை 7 மணிக்கு விஸ்வரூபம், திரவாராதனம், வசோத்தாரா யாத்ராதானம், மஹா பூர்ணாஹீதி நடக்கிறது. 9 மணிக்கு மஹா கும்பாபிஷேம் நடக்கிறது. 10 மணிக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேகம் கும்பகோணம் கோவிந்தபுரம் ப்ரஹீம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜெயகிருஷ்ண மஹராஜ் தலைமையில் நடக்கிறது.