செந்துறை: நத்தம் அருகே செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. இங்கு கடந்த மே 3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இண்டாவது நாள் செபஸ்தியாருக்கு பொங்கல் வைத்து சப்பர பவனி நடந்தது. மூன்றாவது நாள் பொது பொங்கல் மற்றும் திருப்பலி நடந்தது. நான்காவது நாள் காலை மற்றும் மாலையில் புனித சூசையப்பர் உள்ளிட்ட புனிதர்களின் அலங்கார ரத பவனி நடந்தது. குரும்பபட்டியில் துவங்கிய பவனி பாத்திமா நகர், சந்தைப்பேட்டை வழியாக ஆலத்தை அடைந்தது. பக்தர்கள் உப்பு, மிளகு, பொரி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். பாதிரியார்கள் ஆரோக்கியசாமி, லாரன்ஸ், தாஸ், சூசைராஜ், கிறிஸ்து ராஜ் கலந்து கொண்டனர்.