வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் காணலாம். இங்குள்ள வரசித்தி ஆஞ்சநேயர் விசேஷமானவர். கோயிலில் கட்டணம் செலுத்தி பெறப்படும் தயிர்சாதத்தை மூட்டையாகக் கட்டி, அவர் சன்னிதி வாசலில் வைத்தால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்!