பதிவு செய்த நாள்
11
மே
2015
02:05
ஊத்துக்கோட்டை : வீராஞ்சநேய சுவாமி கோவிலில், 40ம் ஆண்டு, அனுமன் ஜெயந்தி மகோற்சவ நவராத்திரி ஆராதனை விழாவை ஒட்டி, உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பென்னலுார்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீராஞ்சநேய சுவாமி கோவில்.
இக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, இந்தாண்டு, வரும், 13ம் தேதி துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், காலை 7:00 மணிக்கு, அபிஷேகமும், 10:00 மணிக்கு, சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும். காலை 11:00 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும், மதியம் 2:00 மணிக்கு ஹரிகதைகானம் நடைபெறும். விழாவை ஒட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேய சுவாமி உற்சவர் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய விழாவான, தீமிதி திருவிழா, வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெலமகண்டிகை, பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர்.