பதிவு செய்த நாள்
11
மே
2015
02:05
வேலூர்: உலக நன்மைக்காக, நாராயணி பீடத்தில், 10,008 மஞ்சள் நீர் கலசங்களுடன் ஊர்வலம் நடந்தது. வேலூர், திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், 23ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாராயணி பீடத்தில் சுயம்புவாக தோன்றி, அருள் பாலிக்கும் நாராயணி அம்மனுக்கு, 10 ஆயிரத்தி, 8 கலசங்களில், மஞ்சள் நீரால், நாராயணி அம்மனுக்கு அபிஷேகம் விழா நடந்தது.
இதையொட்டி காலை, 7 மணிக்கு, நாராயணி வித்யாலாயா பள்ளியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. தாரை, தப்பட்டை முழங்க, குதிரை, யானைகளுடன் புறப்பட்ட ஊர்வலத்தை, சக்தி அம்மா தொடங்கி வைத்தார். கோவில் வளாகத்தை சென்றடைந்த பின்னர், பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.