துளசி என்ற சொல்லுக்குஒப்பில்லாதது என்று பொருள். துளசி இருக்கும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். விஷ்ணுவே துளசி பூஜை செய்ததாக ஹரிவம்சம் என்னும் நுõல் கூறுகிறது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று துளசி தீர்த்தம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் நீராடி பெண்கள் துளசியை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டு வர, நல்ல மணவாழ்க்கை, தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். கருந்துளசி, பசுந்துளசி இரண்டுமே பூஜைக்கு மிகவும் ஏற்றவை. கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும், பசுந்துளசியை ஸ்ரீதுளசி என்றும் சொல்வர். வீட்டில் துளசி மாடம் அமைப்பதற்கு கார்த்திகை மாதம் உகந்தது. இம்மாதத்தில் துளசி பூஜை செய்ய கொடிய பாவம் தீரும்.