பாலக்கோடு திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், ஒலவங்காடு சந்திப்புக்கு அருகில் அமைந்திருக்கும் ஏமூர் பகவதியம்மன் கோயிலில் அம்மனின் திருக்கரங்கள் மட்டுமே வழிபடப்படுகின்றன. மேலும் இந்தத் திருக்கோயிலில் காலையில் சரஸ்வதியாகவும், மதியப்பொழுதில் லட்சுமியாகவும், மாலையில் துர்கா தேவியாகவும் எண்ணி அம்மனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த வழக்கம், இந்தத் திருத்தலத்தின் சிறப்பம்சமாக விளங்குகிறது!