குணசீலம் பெருமாள் திருக்கோயிலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. சென்னைக்கு அருகிலுள்ள திருவெற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோயிலில் அருளும் புற்றீஸ்வரருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுமையாகவே சமர்ப்பிக்கப்படுகிறது. ஷீர்டி சாயிபாபா கோயிலில், துனியில் (அக்னி குண்டம்) மட்டைத்தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.