சாயல்குடி : சாயல்குடி அருகே வனப்பேச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.