பதிவு செய்த நாள்
18
மே
2015
12:05
திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் மகோற்சவ விழா துவங்கி நடந்துவருகிறது. திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள, திரவுபதியம்மன் கோவிலின் அக்னி வசந்த மகோற்சவ விழா கடந்த ஏப்.,22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 14 ம் தேதி வரை, மாலை நேரத்தில், சென்னை, ஈஞ்சம்பாக்கம் லதா கதிர்வேல் மகாபாரத இசை பேருரையும், சொரக்காயல்நத்தம் காளியப்பன் ஆசிரியரின் கவியரங்கமும் நடக்கிறது. தமிழர் தெருக்கூத்து இயக்கத்தின் ஆசிரியர்கள் பக்கிரிசாமி, செல்வம், சக்திவேல் உள்ளிட்ட குழுவினரால் வரும் 24 ம் தேதி துவங்கி ஜூன் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு, மகாபாரத தெருக் கூத்து நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக மே மாதம் 31ம் தேதி அர்ச்சுனன் தபசு, 10ம் தேதி கர்ணமோட்சம், 12ம் தேதி காலை 9:00 மணிக்கு அரவான் களப்பலியும், 11:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.