விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அத்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி வாணியர் வீதியிலுள்ள அத்தி விநாயகர், ஸ்ரீமகாதேவி கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை யொட்டி நாளை (20ம்தேதி) மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. தொடர்ந்து 22ம் தேதி காலை 7: 20 மணிக்கு நான்காவது கால யாகபூஜை துவங்குகிறது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 10: 30 மணிக்குள் அத்தி விநாயகர் , ஸ்ரீமகாதேவிக்கு கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.