பதிவு செய்த நாள்
20
மே
2015
12:05
கோபி: கோபி, வீரபாண்டி கிராமம், புகழேந்தி வீதியில் உள்ள மசிரி மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா, கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 13ம் தேதி கம்பம் நடப்பட்டு தீர்த்தம் ஊற்றப்படுகிறது. கடந்த, 18ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு, 7 மணிக்கு பட்டுப்போர்த்தி ஆடுதல், கரகம் ஆடுதல், இரவு, 9 மணிக்கு பொங்கல் வைத்தல் நடந்தது.இன்று காலை, 6 மணிக்கு குண்டம் இறங்குதல், காலை, 11 மணிக்கு அக்னி அபிஷேகம், இரவு, 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மை அழைத்தல் நடக்கிறது. நாளை, 21ம் தேதி காலை, 6 மணிக்கு அரண்மனை பொங்கல், காலை, 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, 9 மணிக்கு சந்திய வனத்துறையில் இருந்து பால்குடம் மற்றும் சிவன், சக்தி குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு கருப்பண சுவாமிக்கு கிடாய் வெட்டுதல், மாலை, 4 மணிக்கு அக்னி கும்பம் மற்றும் அலகு குத்தி வருதல், இரவு, 8 மணிக்கு திருக்கம்பம் எடுத்தல் நடக்கிறது. 22ம் தேதி காலை, 10 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், இரவு, 7 மணிக்கு மறுபூஜை நடக்கிறது.