கோபி: கோபி அருகே இருகாலூரில் பொன்காத்தையன் கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 25 மற்றும் 26ல் வாணவேடிக்கை திருவிழா நடக்கிறது. 25ம் தேதி இரவு, 9 மணிக்கு, வீட்டுக் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு, காட்டு கோவிலுக்கு ஆடல், பாடல் வாண வேடிக்கையுடன் செல்கிறார். ஜூன், 1ல் மறுபூஜை நடக்கிறது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன், தக்கார் மாலா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.