மன்னார்குடிக்கு அருகில் திருபாதாளீச்சரம் என்ற திருத்தலம் உள்ளது. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்ட இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் சர்ப்பபுரீஸ்வரர். இந்த சுயம்பு மூர்த்தியின்மேல் பாம்பு ஊர்ந்து சென்றது போன்ற வடு உள்ளது. இவரை தரிசித்தால் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.