செல்வந்தன் ஒருவன், மகான் ஒருவரைச் சந்தித்து, சுவாமி! என்னிடம் பணம், பொன், பொருள் ஏராளமாக இருக்கிறது. இருந்தும் கடவுளின் கடாட்சம் கிட்டவேயில்லை, என்ன செய்வது? என்று கேட்டான். பணத்தால் வந்ததையெல்லாம் கொடுத்துவிடு! சொன்னார் மகான். மறுநாள் தன் செல்வம் முழுவதையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்த செல்வந்தன், அதனை மகானிடம் தந்து விட்டு, இப்போது கிட்டுமா சுவாமி? என்று கேட்டான். மகனே! நான் சொன்னது உன் செல்வத்தை கடவுளுக்குத் தரும்படியல்ல; உன்னிடமுள்ள அகந்தை, ஆணவம், கோபம் போன்ற குணத்தால் வந்த தீய குணங்களை விட்டுவிடு என்றுதான்! செல்வம் வந்த நிலையிலும் செருக்கு கொள்ளாதவனுக்கு... இறையருள் நிச்சயம் கிட்டும்...! அமைதி தவழச் சொன்னார் மகான்.