பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
குன்னுார்: குன்னுார் சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடந்தது. குன்னுார் வெலிங்டன் அருகேயுள்ள சின்ன வண்டிச்சோலையில் அமைந்துள்ள, தேவி கருமாரியம்மன் கோவிலின், மகா கும்பாபிஷேக விழா மற்றும் 110ம் ஆண்டு கரக உற்சவ விழா, 19ம் தேதி துவங்கியது. கடந்த, 19ம் தேதி முதல் காலவேள்வி, விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, பாலிகா பூஜை, கலசாகார்சனம், யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு விமான கோபுர கலச கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலவர் கலசாபிஷேகம், மகா தீபாராதனை, தசதரிசனம், அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம், அபிஷேக ஆராதனை, முகூர்த்த வளையல் அணியும் நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடந்தன. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். நேற்று அபிஷேக ஆராதனை, கங்கை புறப்படுதல், திருக்கரகம் அழைத்தல் ஆகியவை நடந்தன. இன்று மாலை 4:00 மணிக்கு, 110வது ஆண்டு திருக்கரக ஊர்வலம் நடக்கிறது. 24ம் தேதி மாலை, 3:00 மணிக்கு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி, 25ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.