பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி அருகேயுள்ள பெரமனூரில், வேம்பையனார், சக்தி மாரியம்மன், வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பனமரத்துப்பட்டி அருகே, பெரமனூர் பஞ்சாயத்து நடுவட்டத்தில், 250 ஆண்டுகள் பழமையான, வேம்பையனார் கோவில் உள்ளது. தற்போது, புதியதாக ஸ்வாமி சிலைகள் செய்து, தனித்தனியாக கருவறை மற்றும் கோபுரம் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு, விநாயகர் வழிபாடு, குபேரலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், யாக சாலை பிரவேசம் முதல்கால பூஜை செய்யப்பட்டது. நேற்று, அதிகாலை, 4 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.