பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
புதுச்சேரி: அவ்வை நகர், ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. லாஸ்பேட்டை, அவ்வை நகரில் ராஜகணபதி, அபய ஆஞ்சநேயர் கோவிலில் பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவகிரக சன்னதிகள் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த வாரம் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 20ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், மாலை முதல் கால பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜைகளும், விசேஷ ஹோமங்களும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, நான்காம் கால பூஜைகள் நடந்தது. காலை 8:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கும், காலை 9:05 மணிக்கு, ராஜகணபதி மற்றும் அபய ஆஞ்சநேயருக்கும் மகா கும்பாபிஷேகமும் நடந்தது.