சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் வைகாசிவிசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐதீகப்படி திருவிழா வசூலுக்கு கோயிலிலிருந்து சந்திவீரன் கூடம் சென்ற விநாயகர் சேவுகப்பெருமாள் கோயில் திரும்பியதும் கலசபூஜை, நடந்தது. பிற்பகல் சிவச்சாரியார்கள் திருமந்திரங்களுடன் பிடாரி அம்மன் சந்நிதியிலும் அதைத்தொடர்ந்து சேவுகப் பெருமாள் ஐயனார் சன்னதியில் கொடியேற்றப்பட்டது.சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தினமும் விநாயகர்,பூரணை,புஷ்கலை சமேத சேவுகப்பெருமாள் சுவாமி,பிடாரிஅம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருள்கின்றனர்.இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா கலை,இசை நிகழ்ச்சி நடக்கிறது. மே 28ல் சுவாமி திருக்கல்யாணம், 29ல் சமணர் கழுவேற்றம்,ஜூன் 1ல் தேரோட்டம் 2ல் புஷ்ப பல்லக்கு விழா நடக்கிறது.