பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
ஜாபர்கான்பேட்டை: ஜாபர்கான்பேட்டையில் உள்ள, பவானி அம்மன் கோவிலில், வரும், 29ம் தேதி, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஜாபர்கான்பேட்டை, ராகவன் தெருவில், பவானி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், நாளை முதல் துவங்குகின்றன. நாளை மற்றும் 28ம் தேதிகளில், காலை 9:00 மணி மற்றும் மாலை 4:00 மணிக்கு, பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. வரும், 29ம் தேதி காலை 9:௦௦ மணிக்கு, கருவறை விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கும். இரவு 7:00 மணிக்கு, பவானி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.