Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அபிடேகப் பொருள்களின் அளவு வகை! அபிடேகப் பொருள்களின் அளவு வகை! பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றின் அளவு வகைகள்! பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
உரிய திரவங்களால் சிவ பூசை செய்தலின் பயன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
14:28

இறைவநிற்கு அனுதினமும் ஆட்டும்உத கத்தினுக்கு
எழிற்பயன் பரம சாந்தம்
இனியதயி லந்தனக்கு இன்பமே சுசிநல்கும்
ஏற்றகவ் வியம தற்கே
முறைகொள்பஞ் சாமிருதம் வெற்றுநெய் யாட்டிலுயர்
முத்தி தீம்பா லினுக்கு
முதிராயுள் வர்த்திக்கும் மிக்கபிர சாவிர்த்தி
மொழியும்த திக்கு மாவுக்கு
அறைகடன் தீர்க்குமெய்ப் பிணியறுத் திடுநெலிக்கு
அரச வசியம் மஞ்சளுக்கு
ஆரோக்கி யம்கரும்பு தகந்தனக் கென்னவா
கமந்தன் னில்உரைத் திட்டனை
சிறையிலொரு பிரமனை யடைத்துயிர் படைத்திடும்
சேயை யுதவிய அத்தனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

சுகமளித் திடுதேன் அரம்பையிற் பயிர்விர்த்தி
சுதனுதவும் வில்வ கமலம்
தொல்லுலக வசியமா மாதுளை குரோதகந்
தொலைக்குமகிழ் உதவும் பலா
வகைதரு குளஞ்சியின் கனிசோக மாற்றுமுயர்
மந்த்ரப்பி ரதந ரத்தம்
மாற்றலர் ஒழிக்கும் சருக்கரைய திளநீர்
வழங்கிடுமி ராச யோகம்
நிகரின்ம றலிப்பயம் ஒழிக்கும்எலு மிச்சையென
நித்யசாம்ப் ராச்ய நல்கும்
நிதிபெருகு சீர்தரும் கந்தாபி டேகமென
நீபுகன் றனை யாகமம்
சிகரிவட வரையினெழ முகில்பொழிலின் உலவவுயர்
திருமதிலின் மதியு லாவும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.