Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆகம விதிப்படி செய்யப்படும் அபிடேக விதிகள்! ஆகம விதிப்படி செய்யப்படும் அபிடேக ... உரிய திரவங்களால் சிவ பூசை செய்தலின் பயன்! உரிய திரவங்களால் சிவ பூசை செய்தலின் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
அபிடேகப் பொருள்களின் அளவு வகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
14:25

ஐயைந்து கதலியின் கனிபலாக் கனியதொன்(று)
ஆகும் எலு மிச்சை ஐயைந்து
ஆகுமூ வைந்துமாங் கனிபத்து மாதுளையும்
அத்தகை குளஞ்சி வகையும்
பெய்யுமிள நீர்த்தெங்கு பத்தாறு இரண்டெனம்
பேசியந ரத்த மதுரம்
பெருசரக் கரைமூன்று பலமதுவு ழக்குநெய்
பீடுதரு நாழியொன்றான்
தூயவா னைந்துசிவம் ஆறுபடி கீரமாந்
தோய்ந்ததயிர் முக்கு றுணியாம்
துகள்மஞ்சள் பலமெண்ணெய் ஒருபடிக் காம்எனச்
சொல்லினாய் நிகமா கமகம்
செய்யமறை முனிவர்மூ வாயிரவர் இவ்வாறு
தினமும் அபிடே கம்செயும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

அரிசியொரு படியிடிய தாமலக மூன்றுபலம்
அறையு மாடத் தொடுபய
றாதிதுகள் படிமூன்றோர் படிகரும் பின்சாறு
ஆழாக் கினிய தூயபனிநீர்
வருபுனல் திரவியம் இரண்டுபல மாம்குறுணி
மருவும்அன் னாபி டேக
மஞ்சனநி வேதனச்சுத் தானமோர் குறுணியாம்
மணமிகும் கந்த தோயம்
பெருகுமைந் தமுதமும் குறுணியவ் வண்ணமே
பேசுமலர் பத்தி ரம்பொன்
பெரியரத் னோதகமும் ஓரொழு மரக்கால்
பிரத்ததயி லத்தி னுக்காம்
திரகரண பரிசுத்த அடியருய இவ்வகை
சிவாகமந் தனிலு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

வாசமான் மதம் அகில் கருப்பூரம் இமசல
மணங்கொள்கோ ரோச னையுடன்
மருவுகத் தூரிகுங் குமபங்க சந்தனம்
வகுத்த பலம்இரு நான்கதாம்
பூசனைசெய் பத்திரம் அலங்கல்மலர் அட்டகம்
புனையா டையோர் எண்கரம்
பொற்புறும் இலிங்கம்உத் தரியமுழ நான்கதாம்
போற்றிய நிவேத னத்திற்
காசுதவிர் தண்டுலத் தொகையும்இரு தூணியாம்
அட்டபலன் வர்க்க வகையாம்
அணிதீப தைலம்பி ரத்ததயி லத்தினுக்கு
ஆமென்று நூல்பு கன்றாய்
தேசுபெறு முனிவர்மூ வாயிரவர் இவ்வகை
சிறந்த பூசனை செய்துவாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.