Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு ... கருங்குளம் சொக்க கூத்தர் சாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருங்குளம் சுடலை கோயிலில் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
11:07

திருநெல்வேலி : கருங்குளம் சுடலை மாட சுவாமி கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கருங்குளத்தில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆற்றங்கரை சுடலை மாட சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா நாளை (7ம் தேதி) துவங்குகிறது. காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷõபந்தனம், இரவு 7 மணிக்கு சுடலை மாட சுவாமிக்கு விசேஷ பூஜை, தீபாராதனை நடக்கிறது. 8ம் தேதி காலை 9 மணிக்கு சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, மாலை 5.30 மணிக்கு விசேஷசந்தி, பூத சுத்தி, கலா கர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9ம் ÷தி காலை 8.30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 10ம் தேதி காலை 6.30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 10.35 மணிக்கு ஆற்றங்கரை சுடலை மாட சுவாமி, பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம், 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மகேஷ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கருங்குளம் ஆற்றங்கரை சுடலை மாட சுவாமி கோயில் கும்பாபிஷேக கமிட்டியினர் மற்றும் யாதவ சமுதாயத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar