பதிவு செய்த நாள்
06
ஜூலை
2011
11:07
தூத்துக்குடி : கருங்குளம் சொக்க கூத்தர் சாஸ்தா கோயில் மஹா கும்பாபிஷேக விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. கருங்குளம் சொக்க கூத்தர் சாஸ்தா கோயில் மஹாகும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை, ஸர்வ தேவதா ப்ராத்தனை அனுக்ஞையும், எஜ்மான சங்கல்பம் புன்யாக வாசனம், மஹாகணபதி வேள்வி திரவ்யாஹூதி ப்ரமச்சாரி பூஜை, மகா பூர்ணாஹூதி தீபாரதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ரூத்யுஞ்ய ஹோமம், துர்க்கா ஹோமம், ஜூரமுக பூஜை, கோபூஜை, பூர்ணாஹூதி அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 5மணிக்கு கருங்குளம் தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்துவருதல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி திக்தேவதா பூஜை, ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், எஜமான வர்ணம் ஆச்சார்ய வர்ணம் ஆகியவை நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை, விசேஷ சந்தி, பூதசுத்தி, துவாரபூஜை, வேதிகா அர்ச்சனை, 2ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு விசேஷ சந்தி, பூதசுத்தி பூஜையும், 3ம்கால யாகசாலை பூஜையும் நடக்கிறது,வரும் 10ம் தேதி காலை 7 மணிக்கு மங்கள இசையும் அதைத்தொடர்ந்து 4ம்கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு கடம்புறப்படுதல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு மேல் சொக்க கூத்தர் சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன விமான ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மஹேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சண்முகநாதன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவிஆணையர் வீரராஜன், நடைமுறை அறங்காவலர் முருகன், இன்ஸ்பெக்டர் பாலு, கோயில் அர்ச்சகர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.