பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
கோபி: கோபி, நம்பியூர் புது அய்யம்பாளையத்தில், 300 ஆண்டு பழமையான ஐயம் தீர்க்கும் விநாயகர், பொன் மாரியம்மன் கோவில், மாகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை (29ம் தேதி) நடக்கிறது. இக்கோவில்கள் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்துக்காக, கோவிலில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் யாக பூஜை, வேள்வியை துவக்கி உள்ளனர். நாளை (29ம் தேதி) காலை, 8 மணிக்கு ஜயம் தீர்க்கும் விநாயகர் கோவிலிலும், காலை, 9 மணிக்கு மேல் பொன் மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் நவ கிரகங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணி குழு தலைவர் புது அய்யம்பாளையம் பொன்னுசாமி, மலையப்பாளையம் உதயகிரி முருகப்பெருமான் கோவில் அர்ச்சகர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், மலையப்பளையம் குமாரஞானசம்பந்தசிவம், வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். முன்னதாக இன்று, மாலை, 3 மணிக்கு காந்திபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரையுடன், பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து, கோவிலை வந்தடைகின்றனர். இரவு, 8 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பின், அம்மன் அலங்கார பூøஐயில், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள öஐயலலிதா, நலமுடன் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு, நம்பியூர் முன்னாள் ஒன்றிய செயலாளரும், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளருமான பொலவபாளையம் பொன்னுசாமி முன்னிலையில் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காலை, 7 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.