கடலாடி:கடலாடியில் பத்திரகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில்களில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. அம்மன்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானே பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், மீனங்குடி ஸ்ரீசுயம்பு கல்லடி பெருமாள்கோயிலில் 3 நாள் திரி எடுத்தல் விழா நடந்தது. மூன்றாவது நாள் இரவில் இடும்பன் பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.