பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் பஞ்சாயத்து முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலுக்கும், காவிரி ஆற்றுக்கும் இடையில், 150 ஆண்டுக்கு முன், ஆலமரத்தின் கீழ் முனியப்ப ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், குறைகளைச் கூறி வேண்டுதல் வைக்கின்றனர்.வேண்டுதல் நிறைவேறுவதால், பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும், வேல் நட்டும் நேர்த்திக் கடன் செய்கின்றனர். காவல் தெய்வமான முனியப்ப ஸ்வாமி, கோவில் கட்டிடம் ஏதுமின்றி மரத்தடியில் இருப்பதாலும், ஸ்வாமி சிலை வைத்து, பல ஆண்டுகளானதாலும், புதிய சிலை வைத்து புனரமைப்பு செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை யாகவேள்வி, கணபதி பூஜை, நவகிரக வேள்வி, பூஜை செய்யப்பட்டு, பாலாலய வேள்வி நடந்தது. பின், பாலாலயத்திற்கு சிறப்பு வழிபாடும், ஆராதனையும் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.