ஒருமுறை நாரதர் தலைமையில் யாகம் நடந்தது. மந்திரபிரயோகத்தில் தவறு நேர்ந்ததால், யாகத்தீயில் வெள்ளாட்டுக் கிடா தோன்றியது. ஆவேசத்துடன் உலகையே அழிக்க அது புறப்பட்டது. இதை அறிந்த முருகன், நவவீரர்களின்தலைவரான வீரபாகுவை அங்கு அனுப்பினார். கிடாவை அடக்கிய வீரபாகு, முருகனிடம் அதை ஒப்படைத்தார். நாரதர் உள்ளிட்ட ரிஷிகள், அந்தக் கிடாவை வாகனமாக ஏற்க வேண்டினர். அன்று முதல் முருகனின் வாகனங்களில்கிடாவும் இடம் பிடித்தது.