போஜராஜன் சபையில் காளிதாசன், தண்டி, பவபூதி என்ற மூவரும் பெரும் கவிஞர்கள். ஒரு முறை, இந்த மூவருள் சிறந்தவர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ராஜாவுக்கு உண்டாயிற்று. மூவரையும் அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இவர்களின் கவித்திறனை வரிசைப்படுத்துமாறு அம்மனிடம் வேண்டிக் கொண்டாளாம். தண்டிதான் கவிஞன். பவபூதியோ பண்டிதர் என்று ஒரு அசரீரி வாக்கு கர்ப்பக்கிரகத்திலிருந்து கேட்டதாம். தன்னைப் பற்றி அம்மன் ஏதும் சொல்லாமல் இருக்கவே, அப்படியானால் நான் யார்? என காளிதாசன் கோபமாகக் கேட்டானாம். அம்மன் புன்சிரிப்புடன், நீயே நான், நீயே நான், நீயே நான் என்று பதில் சொன்னாளாம்.