அண்ணாமலையின் கிளி கோபுரத்தின் வழியே உள்ளே சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபம். மகிழ மரத்தைக் காணலாம். இம் மகிழ மரத்தின் கீழ் நின்று பார்த்தால் திருக்கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். திருவண்ணாமலை திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தால் ஆயிரத்தெட்டு லிங்கங்களையும், நூற்றெட்டு லிங்கங்களையும், நடராசர் சன்னதியையும் காணலாம். மூன்றாம் பிரகாரத்தில் அண்ணாமலையார் தவயோகியாக சூட்சும வடிவில் உள்ளார். இதன் காரணமாக இங்கு அமர்ந்து தியானம் செய்தால் ஆழ்ந்த அமைதி பெறலாம்.