பதிவு செய்த நாள்
03
ஜூன்
2015
12:06
ஒக்கியம் துரைப்பாக்கம்: ஆழிகண்டீஸ்வரர் ஆலயத்தில், திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது. ஒக்கியம் துரைப்பாக்கம், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆழிகண்டீஸ்வரர் கோவிலில், வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் சார்பில், திருஞான சம்பந்தர் குருபூஜை விழா மற்றும் சிறுவர், சிறுமியருக்கு திருமுறை பயிற்சி 2ம் ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம், நடைபெற்றது. மாலை 5:00 மணி அளவில், திருவான்மியூர் ஈசன் அடியார்களால் திருமுறை ஓதுதல் நடைபெற்றது. அதையடுத்து, தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தை சேர்ந்த, ஒளியரசு, சைதை ஸ்ரீநடராஜ தமிழ் வேத பாராயண பக்த ஜனசபையைச் சேர்ந்த ஜோதி.ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக, திருஞான சம்பந்தரின் ஆளுமை திறம் என்கிற தலைப்பில் சைதை கைவளர் தொண்டு அமைப்பாளர் பழ.பிரபாகரன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.