லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்த லட்சுமணம்பட்டி பாம்பாலம்மன் கோவில் திருவிழா, மூன்று நாட்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம், 29ம்தேதி மலையாள ஸ்வாமிக்கு மாவிளக்கு போடுதல், நகைப்பெட்டி ஊர்வலமாக எடுத்து வருதல் மற்றும் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த மாதம், 30ம் தேதி பொங்கல் வைத்தல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் வந்தனர். 31ம்தேதி பொங்கல் வைத்தல் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், கரகம் எடுத்தல் விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.