சோழவந்தான் :சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி விழாவில் பக்தர்கள் பூக்கள் இறங்கினர். விழா மே 25 ல் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. பத்தாம் நாளான நேற்று பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு துவங்கியது.தாசில்தார் ராமகுமார், எம்.வி.எம்., குழும தலைவர் மணிமுத்தையா துவக்கி வைத்தனர்.பக்தர்கள் மலர் துாவ, பூஜாரி கணேசன் பூக்குழி இறங்கினார். பின், பக்தர்கள் இறங்கினர்.பூக்குழியில் விழுந்த பிச்சைவேல், 59, நாகரத்தினம், 48, லீலாவதி, 27, காயம் அடைந்தனர்.