இரண்டு லட்சம் மல்லிகை அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2015 10:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி விசாக விழாவின் பத்தாம் நாளில் இரண்டு லட்சம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப் பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. நிறைவு நாளன்று யாகசாலை பூஜை, மஞ்சள் நீராடுதல், திருக்குட நீராட்டம் நடந்தது. மாலை நாதஸ்வர கச்சேரி,இரவு கோயிலை சுற்றி கலை,இசை நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சேவுகப்பெருமாள் ஐயனார்சுவாமி முற்றிலும் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப் பல்லக்கிலும், விநாயகர் மூஞ்சிறு வாகனத்திலும்,பிடாரி அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.