விருத்தாசலம்: பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பாலாம்பிகை, விருத்தாம்பிகை சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், தென்கோட்டை வீதி ÷ மாகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.