மயிலாடுதுறைக்கருகில் கொற்கை எனும் கிராமத்தில், வனதுர்காதேவி கோயில் உள்ளது. இங்கு எட்டுக் கைகளுடன் மஹிசாசுரமர்த்திணியாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு தினமும் உள்பாவாடை கட்டி அதன்மேல் புடவை கட்டப்படுகிறது. இந்த அம்மனுக்கென திருவுருவப்படம் எதுவும் கிடையாது. அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை அம்மனாக பாவித்து பூஜிக்க வேண்டும். இந்த அம்மனுக்கு அழுகுரல், தாரை, தப்பட்டை போன்ற வாத்தியங்களின் சப்தம் எதுவும் காதில் விழக்கூடாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தக் கோயில் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக காட்டுக்குள் மிகச் சிறியதாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் இந்தக் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. அரிதான இந்த நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம் என்றது தேவதை.