பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
11:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் 6.6.15ல் கோலாகலமாக நடைபெற்றது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் 6.6.15 நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக, அதிகாலை 2:20 மணியளவில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, காந்தி சாலையில், அலங்காரத்துடன் தயாராக இருந்த தேரில், காலை 3:00 மணிக்கு எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின், காலை 6:00 மணியளவில், தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.வரதராஜ பெருமாள் தேரில் பவனி வரும் காட்சியை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.தேர், காந்தி சாலை, காமராஜர் சாலை, ராஜவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நண்பகல் 12:30 மணியளவில், தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.