பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
12:06
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில், வைகாசி திருவிழா நடைபெற்றது. திவ்ய தேசங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசித் திருவிழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் தேரில் வைத்து, வடம் பிடித்து இழுத்தனர். தேர் சிவன்கோவில் தெரு, பெருமாள் கோவில்தெரு, நடுவீதி, வழியாக சுற்றி வந்து, கோவிலை அடைந்தது.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் முத்துச்சாமி, செயல்அலுவலர் கருணாகரன், மேற்பார்வையாளர் ராஜேந்திரன், அறக்கட்டளை தலைவர் ஜெயபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.