பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
02:06
திருச்சி : ஸ்ரீரங்கம், வடக்கு சித்திரை வீதியில் உள்ள ஹிந்து சமய மன்றம் சார்பில், சீதா கல்யாண மஹோத்சவம் நடந்தது.
ஸ்ரீரங்கம் ஹிந்து சமய மன்றம் சார்பில், கடந்த, 37 ஆண்டுகளாக சமஷ்டி உபநயனம்-விவாஹம் நடந்து வருகிறது. 38ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் கடந்த, 30ம் தேதி நடந்தது. இதையடுத்து, நாமசங்கீர்த்தனம், "ராமாயணம் குடி கொண்ட கோவில் ராமனுஜர் என்ற தலைப்பில் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமியின் உபன்யாஸம் நடந்தது. பின் வாமன அவதாரம், சீதா கல்யாணம் உபன்யாஸம் நடந்தது.நேற்று முன்தினம் அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம், நேற்று காலை, 8 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனையுடன் துவங்கியது. காலை, 10.30 மணிக்கு மேல் சீதா கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மாலை, 4 மணிக்கு வசந்த கேளிக்கையும், இரவு, 8 மணிக்கு பவ்வளிம்பு உத்ஸவம் மற்றும் ஆஞ்சநேயர் உத்ஸவம் நடந்தது.