பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
02:06
லாலாபேட்டை : லாலாபேட்டை அடுத்துள்ள மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள லஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கோலாகலமாகநடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா மகாதானபுரம் அக்ரஹாரத்தில், லஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் சந்நிதி உள்ளது.
இக்கோவிலில், நேற்று காலை, 7 மணி முதல், 8.30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.முன்னதாக கடந்த, 5ம் தேதி காலை, 8 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடந்தது. மறு நாள் சனி அன்று சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், மஹாசாந்தி ஹோமம் நடந்தது. அன்று மாலை, பல்வேறு ஹோமங்கள் நடந்தன. நேற்று புன்யாஹவாசனம், காலசந்தி, திருவாபாராதனம், நித்யஹோமம், பூர்ணாஹூதி, யாத்ராதாபனம், கடம் வலம் வருதல் நடந்தது. காலை, 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் மூலவருக்கும் கும்பாபிஷேகம், விண்ணப்பம் சாற்று முறை நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகத்துக்கு, காலை, 10 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8 மணிக்கு திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.