பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் ஜெயமங்கள விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையெ õட்டி, கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. இரவு 8:00 மணிக்கு ரக்ஷாபந்தணம், மிருத்சங்கரணம், அங்குரார்பணம், முதல் கால யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று (8ம் தேதி) காலை 4:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு ஆஞ்சநேயர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு ஜெய மங்கள விநாயகருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும்; 10:25 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.