பதிவு செய்த நாள்
10
ஜூன்
2015
11:06
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் கிராமத்தில் ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமத்தில் ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ழாவையொட்டி இன்று காலை 9:00 மணிக்கு நூதன விக்ரஹங்களுக்கு கரிகோலம், நான்காம் கால பூஜை, பூர்ணாஹதி, தீபாரதனையும், மாலை 5 மணிக்கு விசேஷ சந்தி ரக்ஷாபந்தனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தனம், 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹதி தீபாரதனையும், காலை 7:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறபாடும், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.