புதுச்சேரி:காவேரி நகர் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நாளை நடக்கிறது. ரெட்டியார்பாளையம் காவேரி நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று (17ம் தேதி) மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 108 சங்கு ஸ்தாபனம், முதல் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது.
நாளை (18ம் தேதி) காலை 7:30 மணிக்கு 2ம் கால பூஜை ஹோமம், காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.