பதிவு செய்த நாள்
17
ஜூன்
2015
12:06
ஓசூர்: கெலமங்கலத்தில், ஸ்ரீ பாலகுருமூர்த்தி எல்லம்மா தேவி கோவில் கட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கெலமங்கலம் பகுதியில்,
சித்தலிங்கேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே உள்ள காலி இடத்தில், பாலகுருமூர்த்தி, எல்லம்மா தேவி கோவில் கட்ட, கெலமங்கலம் பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி, கடந்த, 13ம் தேதி, கணபதி பூஜை மற்றும் சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டது.
14ம் தேதி காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜை
செய்யப்பட்டது. நேற்று, காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமம், திலக ஹோமம், சாகித்ய பூஜை, ஸ்தல சுத்தி பூஜை செய்யப்பட்டு, கோவில் கட்டும் பணி துவங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை,
கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.