Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி விநாயகர் கோவில் மண்டல பூஜை! ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் பக்தர்கள் கூட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2015
12:06

சத்தியமங்கலம் : அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள்
கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுப்புடவைகளை பக்தர்கள்,
போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி
மாரியம்மன் கோவில் பிரதானமானது. நேற்று அமாவாசை என்பதால், காலை, 6 மணி பூஜைக்கே, பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர்.மதியம் உச்சிகால பூஜையின்போது, கோவிலை சுற்றிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு, ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக நடந்து சென்று, பண்ணாரி அம்மனை வழிபட்டனர். நேற்று பக்தர்களுக்கு, பண்ணாரிமாரியம்மன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.அம்மனுக்கு பணத்தால் கட்டப்பட்ட மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பை குவித்து, வணங்கினர். கோவில்
வளாகத்தில் பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை
நிறைவு செய்தனர்.இதேபோல், அமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் உள்ள
பவானீஸ்வரர் கோவில் மற்றும் வேணுகோபால் ஸ்வாமி கோவிலிலும், வியார்பாளையத்தில்
உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும், தவளகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுப்புடவைகள், நேற்று கோவில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த புடவைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar