பதிவு செய்த நாள்
08
ஜூலை
2011
11:07
திருவேங்கடம் : சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வரும் 11ம் தேதி துவங்குகிறது. சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 11ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. 11ம் தேதி மாலை 5 மணியளவில் மேளதாளத்துடன் விழா ஆரம்பமாகிறது. பின் எஜமானர் வர்ணம், விக்னேஷ்வர, வாஸ்துசாந்தி பூஜைகள், பிரவேச பலி, புண்ணியாக வாஜனம், ருத்ர ஹோமம், கும்ப ஆவாஹன, யந்திர பூஜைகள், மகாகணபதி, லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, பிம்பசுத்தி, தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் யந்திர பிரதிஷ்டை நடக்கிறது. 12ம் தேதி காலை மேள வாத்தியம், கணபதி, திரிதேவி, ருத்ர, நவக்கிரக ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாகுதி, கடம்புறப்பாடு, நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, சரஸ்வதி, நவக்கிரகங்கள், உடையநாயகி அம்பிகை உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின் மகா அபிஷேகம், அம்மன் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக பூஜைகளை சிவகாசி சர்வசாதகம் கணேச அய்யர் நடத்துகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் அக்தார் மற்றும் நிர்வாகி சுப்பையா, வருஷாபிஷேக குழுவினர் மற்றும் இந்து செங்குந்தர் பொதுமக்கள் செய்துள்ளனர்.