பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் உள்ள வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் வரும் 26ம் தேதி கும்பாபி ஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றமும், மாலை 7 மணிக்கு 63 நாயண்மார்கள், நவக்கிரகம், விநாய கர், சரஸ்வதி, சிவலிங்க திருமேணி கருகோலம் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு நிலத்தேவர் வழிபாடும், நாளை 24ம் தேதி காலை புற்றுமண் வழிபாடு, முளைப் பாலிகை வழிபாடு, திருமகள் வழிபாடு, காப்பு அணிவித்தல், முதற்கால வேள்வி நடக்கிறது. பின், 25ம் தேதி காலை திருக்குறிப்பு திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் நடக்கிறது. 26ம் தேதி காலை 6 மணிக்குமேல் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 7:30 மணிக்குமேல் மூலவர் விமானம், கருவறை சுவாமி அம்மன் ஆகியவைகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.