பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
தேவகோட்டை:தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைக்கு பின் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரம், சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மன், மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பெரியண்ணன், ராஜ்குமார், வக்கீல் சொர்ணலிங்கம், பேராசிரியர் ஜம்புலிங்கம், இன்ஸ் பெக்டர்கள் ஜெயசீலன்,அண்ணாத்துரை, வி.ஏ.ஓ., ஆணிமுத்து உட்பட நான்கு நாட்டைச் சேர்ந்த கிராமத்தினர் பங்கேற்றனர்.