பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
12:06
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழா, அடுத்த மாதம் 28ம் தேதி நடக்கிறது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வழக்கமான நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆடிக்குண்டம் விழா, அடுத்த மாதம், 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 24ல் லட்சார்ச்சனையும், 25ல் கிராமசாந்தி, 26ல் கொடியேற்றமும், இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 27ல் பொங்கல் வைத்து குண்டம் திறப்பு; 28ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு; காலை, 6:00 குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) நந்தகுமார், பரம்பரை அறங்காவலர் வசந்தா செய்து வருகின்றனர்.