பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
12:06
கள்ளக்குறிச்சி : புக்கிரவாரி விநாயகர், புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி விநாயகர், புத்துமாரியம்மன், நவக்கிரகங்கள் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. இதனையொட்டி நேற்று கோவில் கோபுர கலசம், புனித தீர்த்தங்களுடன் வீதியுலா, கோபுரத்தில் தான்யம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, புண்யாகவஜனம், கணபதி ஹோமம், தனபூஜை, அனுக்ஞை, அஷ்டதிக்ஹோமம், வாஸ்து பூஜை, பிரவேச பலி, அங்குரார்பனம் நடத்தி கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தனர்.மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், வேதிகை அர்ச்சனை, மகா சங்கல்பம், விசேஷ சாந்தி, ஹோமங்கள் நடத்தி பூர்ணாஹூதி சேர்ப்பித்தனர். நாளை அதிகாலை 5:30 மணிக்கு திருமறை பாராயணம், நவக்கிரக பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம் பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து காலை 7.30 மணிக்கு விநாயகர், புத்துமாரியம்மன், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.